மட்டன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி- ஒரு கப்

மட்டன் - கால் கிலோ (எலும்பில்லாமல் சின்னதாக நறுக்கியது)

புதினா- கால் கப்

கொத்தமல்லி-கால் கப்

பச்சை மிளகாய்-4

இஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்

வெங்காயம்- 2

சின்ன வெங்காய விழுது- கால் கப்

நெய்-2 மேசைகரண்டி

ஏலக்காய்-2

பட்டை-2

கிராம்பு-3

அன்னாசிபூ-1

பிரிஞ்சி-1

பெரிய ஏலக்காய்- 1

மிளகு-10

சோம்பு-சிறிதளவு

ஜாதிக்காய் பொடி- சிறிதளவு

தேங்காய் பால்- 2 கப்

உப்பு-தேவைக்கு

கலர் பொடி- சிறிதளவு

செய்முறை:

மட்டனில் பாதி இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிடவும்

பாத்திரத்தில் நெய் விட்டு வாசனை பொருட்கள் மற்றும் மிளகு சேர்த்து வதக்கவும்

பின் வெங்காயம், புதினா,கொத்தமல்லி, பச்சை மிளகாய்,சின்ன வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

பின் மட்டன் மட்டும் சேர்த்து சுருள வதக்கவும்

இப்போது அரிசி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

பின் தேங்காய் பால் மட்டன் வேக வைத்த நீர் சேர்த்து கொதிக்கவிடவும்

பாதி நீர் வற்றியதும் கலர் பொடியில் சிறிது நீர் கலந்து சாதத்தின் மேல் ஒரு ரவுண்ட் விட்டு தம்மில் 15 நிமிடம் போடவும்

மட்டன் ரைஸ் தயார்

குறிப்புகள்:

ரைத்தா, தாளிச்சா உடன் பரிமாறலாம்