மட்டன் யாழ்பாண வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 50 கிராம்

தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - ஒன்று

கிராம்பு - ஒன்று

சோம்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

அரைக்க:

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - சிறிது

பூண்டு - 8 பல்

வறுத்து தூள் செய்ய:

மிளகாய் - 10

சீரகம் - அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

பட்டை - ஒரு

ஏலக்காய் - ஒரு

இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து தூள் செய்ய வேண்டும்.

செய்முறை:

அரைத்தவற்றை கறியுடன் சேர்த்து பிசறவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும்.

நறுக்கியவற்றை கடாயில் போட்டு வதக்கவும். பிறகு கறிக்கலவையை சேர்க்கவும். கறியில் உள்ள நீர் வற்றியவுடன் உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.

கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றை சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

கறி கலவையை குக்கரில் வேக வைத்தால் 7 விசில் வைத்து வேக விட்டு பிறகு கடாயில் கொட்டி நீர் வற்றியவுடன் தூள் சேர்க்கவும்.