மட்டன் மலேசியா வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி- ஒன்று

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

பட்டை - ஒன்று

கிராம்பு - ஒன்று

ஏலக்காய் - ஒன்று

சோம்பு - அரை தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி

அரைக்க:

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - சிறிது

பூண்டு - 6 பல்

சின்ன வெங்காயம் - 3

வறுத்து தூள் செய்ய:

மிளகு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

பட்டை - ஒன்று

செய்முறை:

அரைத்தவற்றை கறியுடன் சேர்த்து பிசறி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு கடாயில் வதக்கிய பிறகு கறி கலவையை சேர்க்கவும்.

நீர் வற்றியவுடன் உப்பு, தனியா தூள், மிளகாய் தூள்,சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும்.

கறி வெந்தவுடன் தூள் செய்தவற்றை சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

கறி கலவையை குக்கரில் வேக வைத்தால் 7 விசில் வைத்து வேக விட்டு, பிறகு கடாயில் கொட்டி நீர் வற்றியவுடன் தூள் சேர்க்கவும்.