மட்டன் பிரியாணி (6 மாத குழந்தைக்கு)
தேவையான பொருட்கள்:
அரிசி - கால் கப் எலும்பில்லாத மட்டன் - 4 துண்டுகள் தயிர் - கால் தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - கால் தேக்கரண்டி அரைக்க : சின்ன வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - பாதி (விதை நீக்கியது) இஞ்சி - கால் அங்குலத் துண்டு பூண்டு - ஒன்று புதினா இலைகள் - 5 மல்லி இலை - 3 தண்டிலுள்ள இலைகள்
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்தவற்றை போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் தயிர் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடியிட்டு மட்டனை வேக வைக்கவும். மட்டன் வெந்ததும் திறந்து கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து குக்கர் வெயிட் போட்டு மேலும் 15 நிமிடங்கள் வேக விடவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியை திறந்து ஒரு கரண்டி அல்லது மத்தினால் சாதம் மற்றும் மட்டனை மசிக்கவும்.
பிரியாணி ரெடி. நெய் கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.