மட்டன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு - 4

காரட்(சிறியது) - ஒன்று

போஞ்சிக்காய்(அவரைகாய்) - 2

லீக்ஸ் (2அங்குலம்) - ஒன்று

உருளைக்கிழங்கு - ஒன்று

துவரம்பருப்பு - ஒரு பிடி

வெங்காயம்(சிறியது) - 5

மல்லி(தனியா) - ஒரு பிடி

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

தண்ணீர் - 8 கப்

தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழம்) - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மட்டன் எலும்பை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். காரட்டின் தோலை நன்கு சீவி அதனை கழுவி அதனை மெல்லியதாகவும் நீளமானதாகவும் ஓரளவான துண்டுகாளாகவும் வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

போஞ்சிக்காயின்(அவரைகாயின்) தேவையற்ற பகுதிகளை வெட்டி அகற்றிவிட்டு அதனை கழுவி அதன் நடுவில் நீளமாக வெட்டிவிட்டு அதனை குறுக்காக(3துண்டுகள்) வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

லீக்ஸை நன்றாக கழுவி அதை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி அதனை கழுவி அதனை ஒரளவு சிறிய துண்டுகளாகவும் சதுர துண்டுகளாக (8 துண்டுகளாக) வெட்டி அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

துவரம்பருப்பை நன்றாக கழுவி அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

வெங்காயத்தின்(சிறியது) தோலை உரித்து அதனை நன்றாக கழுவி அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதன் பின்பு வெள்ளைதுணியில் சிறிய துண்டினை எடுத்து அதில் மல்லி(தனியா), மிளகு, சீரகம் இவை யாவற்றையும் போட்டு அதனை சிறிய பொட்டனமாக கட்டவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் மட்டன் எலும்பு, காரட், போஞ்சிக்காய்(அவரைகாய்), லீக்ஸ், உருளைக்கிழங்கு, துவரம்பருப்பு, வெங்காயம், உப்பு, கட்டிய பொட்டனம்(மல்லி(தனியா),மிளகு,சீரகம்), தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

பின்பு சூப்பை அவிக்கும் பாத்திரத்தை மூடியால் மூடவும்.

இவை நன்றாக அவிந்த பின்பு தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழம்) விடவும். பின்பு அடுப்பில் இருந்து அந்த சூப் பாத்திரத்தை இறக்கவும்.

இறக்கிய சூப்பை சூப் பரிமாறும் கோப்பைகளில் ஊற்றி பரிமாறவும். இதோ சுவையான மட்டன் சூப் தயாராகி விட்டது.

குறிப்புகள்:

மட்டன் சூப் சுவையானதும் சத்துக்கள் நிறைந்ததுமான ஓர் சூப்பாகும். இது குளிர் காலங்களுக்கு சிறந்த ஒர் சூப்பாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் மட்டன் எலும்பு, காரட், போஞ்சிக்காய்(அவரைகாய்), லீக்ஸ், உருளைக்கிழங்கு, துவரம்பருப்பு, வெங்காயம், உப்பு, பொட்டனம் (மல்லி(தனியா),மிளகு,சீரகம்) தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும். சூப்பை அவிக்கும் போது பாத்திரத்தை மூடி அவிக்கவும். மாற்று முறை - இதில் துருவிய கேரட் அல்லது மற்ற காய்களும் சேர்த்து செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.