மட்டன் கீமா ப்ரெட் டோஸ்ட்
தேவையான பொருட்கள்:
கீமா - 150 கிராம்
ப்ரெட் ஸ்லைஸ் - பத்து
பட்டர் - பத்து தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - ஐம்பது கிராம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கட்டு
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை போட்டு பொரிந்ததும் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு நல்ல கிளறி கீமாவையும் போட்டு நல்ல வதக்கி மூடி போட்டு ஏழு நிமிடம் வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி கீரையை நல்ல சாப் செய்து போட்டு கிளறி ஆற வைக்கவும்.
இது பிரெட் டோஸ்டரில் செய்வது:
டோஸ்டரை ஆன் செய்து சூடு வந்ததும், இரண்டு ப்ரெட்டை எடுத்து அதில் கீமா கலவையை பரவலாக வைத்து மூடி டோஸ்டரில் மேலும் கீழும் அரை தேக்கரண்டி பட்டர் போட்டு ப்ரெட்டை வைத்து டேஸ்டரை மூடவும். நல்ல அழுந்த ஸ்டிக் ஆகி ப்ரெட்டும் க்ரிஸ்பியாகி முக்கோண வடிவில் கிடைக்கும்.
குறிப்புகள்:
சுவையான மட்டன் கீமா ப்ரெட் டோஸ்ட் காலை மாலை நேரத்திற்கு ஏற்றது, வெளியில் செல்லும் போதும் எடுத்து செல்லலாம். இது பள்ளிக்கு கொடுத்தனுப்ப வசதியாக இருக்கும்.
கலவை ரெடியாக இருந்தால் செய்வது சுலபம். டோஸ்டர் இல்லாதவர்கள் தோசை தவ்வாவில் பட்டர் போட்டு இரண்டு ப்ரெட்டையும் தனித்தனியாக லேசாக பொரித்தெடுத்து வெஜ் கலவையை பரவலாக வைத்து நல்ல அழுத்தி விட்டு மறுபடியும் இரண்டு பக்கம் மட்டும் பொன்முறுகலாக பொரித்தெடுத்து சாப்பிடவும்