மசாலா பான்கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு (மைதா மாவு) - 2 சுண்டு

ஆட்டா மாவு (கோதுமை மாவு) - ஒரு சுண்டு

துருவிய காரட் - ஒரு கப்

துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்

துருவிய தக்காளிப்பழம் - ௧கப்

முட்டை - ஒன்று (விரும்பினால்)

பால் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

ஆப்பசோடா - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தக்காளிசாஸ் - தேவையான அளவு

செய்முறை:

கிரைண்டரில் (மிக்ஸியில்) கோதுமைமாவு (மைதாமா), ஆட்டா மாவு (கோதுமைமா) துருவிய காரட், துருவிய வெள்ளரிக்காய், துருவிய தக்காளிப்பழம், முட்டை, பால், பட்டர், உப்பு, ஆப்பசோடா, தண்ணீர் ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும் (தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனைஎடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(2-4) மணித்தியாலங்கள் புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி வைக்கவும். உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி உருளைக்கிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்மாட்டி)வைக்கவும்.

இதனை எண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்(கிழங்கு எண்ணெயில்படும்படி).

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்திய கிழங்கினால்(கிழங்கினை எண்ணெயில் நன்றாக புரட்டி)தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை)பான்கேக்கை வேகவிடவும்.

பான்கேக்கின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும்.

பான்கேக் நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய பான்கேக்குகளையும் சுட்டு முதலில் சுட்ட பான்கேக் போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் பான்கேக்குகளைவைத்து அதன் மேல் தக்காளிசாஸ் அல்லது வேறு ஏதாவது சாஸ்ஸினை பூசி பரிமாறவும்.

குறிப்புகள்:

மசாலா பான் கேக் சுவையானதும், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கரோட்டீன், நார்சத்து, நீர்சத்து, பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின், மினரல் போன்ற பலசத்துக்கள் உடையதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் ஆகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா மா)சேர்க்காமல் செய்யவும்,இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும், தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் அதனை சேர்க்காமல் செய்யவும் . மாற்றுமுறை - பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம், தக்காளி சாஸ்க்கு பதிலாக விரும்பிய சோஸ் வகைகளை பாவிக்கலாம்.