மசாலா காலிஃப்ளவர் மஞ்சூரியன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - ஒன்று

முட்டை - ( 1- 3)

மிளகாய்த்தூள் - (1 - 3) தேக்கரண்டி

மஞ்சள் தூள் - (1/2+1/2) ஒரு தேக்கரண்டி

மெட்ராஸ் கறித்தூள் - கால் தேக்கரண்டி (விரும்பினால்)

உப்பு - தேவையானளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

பெருஞ்சீரகம் (தனியா) - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் (பெரிது, நறுக்கியது) - ஒன்று

மாசிக்கருவாட்டுத்தூள் - சிறிதளவு (விரும்பினால்)

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உள்ளி (பூண்டு) - 2 பல்

இஞ்சி (சிறிய துண்டுகள்) - மிக மிக சிறியளவு

கறிவேப்பிலை (சிறியதுண்டுகள்) - சிறிதளவு

அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)

பச்சைமிளகாய் (சிறியதுண்டுகள்) - ஒன்று

கொதிநீர் - தேவையானளவு

செய்முறை:

காலிஃப்ளவரை மிகமிக சிறிய பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கொதிநீர் விட்டு அதில் சிறிதளவு உப்பு, சிறிதளவு மஞ்சள்தூள், நறுக்கிய காலிஃப்ளவர் பூக்கள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். (காலிஃப்ளவரை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு).

வடிகட்டி எடுத்த காலிஃப்ளவரை ஒரு தட்டில்(மைக்ரோவேயில் வைக்ககூடியது) போட்டு வைக்கவும்.

காலிஃப்ளவர் உள்ள தட்டினை மைக்ரோவேயில் வைத்து நன்றாக க்ரில் பண்ணவும் (காலிஃப்ளவரிலிருக்கும் தண்ணீர் வற்றி காலிஃப்ளவர் சுருங்கி பொன்னிறமாக வரும்வரை க்ரில் பண்ணவும்).

காலிஃப்ளவர் சுருங்கி பொன்னிறமாக வந்த பின்பு காலிஃப்ளவர் போட்ட தட்டினை மைக்ரோவேயில் இருந்து வெளியே எடுத்து அதனை நன்றாக ஆற விடவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு வெடித்ததும் அதில் பெருஞ்சீரகம்(தனியா), நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு) நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

இவை தாளித்த பின்பு அதில் சுருங்கி பொன்னிறமாக வந்த காலிஃப்ளவரை போட்டு நன்றாக வதக்கவும்.

காலிஃப்ளவர் வதங்கியதும் அதில் மிக மிக சிறியளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வதக்கவும் (தூள்மணம் இல்லாமல்).

வதங்கியதும் அதில் மாசிக்கருவாட்டுத்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விடவும். கிளறி விட்ட பின்பு இதனுடன் உப்பு, சிறிது சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் அப்படியே விடவும் .

2 நிமிடங்களின் பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை(வாணலியை) இறக்கி அதிலிருக்கும் மசாலா காலிஃப்ளவர் மஞ்சூரியனை ஒரு பாத்திரத்தில் போடவும்.

பின்பு சோற்றுடனோ(சாதத்துடனோ) அல்லது பாண், புட்டு, இடியப்பம் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து பரிமாறலாம்.

குறிப்புகள்:

மசாலா காலிஃப்ளவர் மஞ்சூரியன் சுவையானதும் சத்துகள் நிறைந்ததும் எல்லோராலும் விரும்பக்கூடியதும் ஆகும். எச்சரிக்கை - இருதய நோயாளர், காலிஃப்ளவர் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்கவேண்டியவிசயங்கள் - அஜினோமோட்டோ, மெட்ராஸ் கறித்தூள், மாசிக்கருவாட்டுத்தூள் விரும்பினால் சேர்க்கலாம், காலிஃப்ளவரிலிருக்கும் தண்ணீர் வற்றி காலிஃப்ளவர் சுருங்கி பொன்னிறமாக வரும்வரை க்ரில் பண்ணவும். மாற்று முறை - மைக்ரோவேயில்லாதவர்கள் அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்த காலிஃப்ளவரை போட்டு நன்றாக வறுக்கவும்(வெறும் தாட்சியில்(வாணலியில்)போட்டு வறுக்கவும்).