ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - 1 பெரிய பூ
கரட் - 1
உருளை கிழங்கு - 1
சிக்கென் குயூப் - 1 சிறியது
உப்பு - சுவைக்கேற்ப
பால் - 1 கப்
நீர் - 1 கப்
க்றீம் மில்க் 35% - 2 தே. கரண்டி
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லா மரக்கறிகளையும் சிறிதாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் பால் , நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்.
மரக்கறி நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் (blender) போட்டு மை போல அரைக்கவும்.
அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி க்றீம் மில்க் கலந்து ஒரு கொதி வந்தததும் இறக்கவும்.
உப்பு தேவையென்றால் போடவும்.
குறிப்புகள்:
சூப் தண்ணி போல் தேவை என்றால் சிறிது நீர் சேர்க்கலாம்.
சூப் தடிப்பாக தேவை என்றால் 3 தே. கரண்டி எண்ணை, 3 தே. மைதா கலந்து சூப் இறக்கு முன் விடலாம்.
இந்த கலவை விடும் போது கவனம் தேவை ஒரு கையால் கிளறிக்கொண்டே விடவும். இல்லா விட்டால் சூப் கட்டி பட்டுவிடும்.