ப்ரோக்கலி லெமன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கலி - ஒன்று (சிறியது) பூண்டு - 2 பற்கள் ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி எலுமிச்சை பழம் மிளகு - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ப்ரோக்கலித் தண்டின் மேலுள்ள தடித்த பாகத்தை நீக்கிவிட்டு
சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.
எலுமிச்சையின் மேல் தோலை (ஜெஸ்ட்) ஒரு கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு
பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
அத்துடன் ப்ரோக்கலியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வைத்திருந்து
மிளகு
எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.
சத்துக்கள் நிறைந்த
சுவையான ப்ரோக்கலி லெமன் வறுவல் தயார்.