ப்ரோக்கலி கிச்சடி (6 மாத குழந்தைக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 3 மேசைக்கரண்டி பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி பூண்டு - ஒரு பல் பெருங்காயம் - கால் சிட்டிகை மஞ்சள் தூள் - கால் சிட்டிகை ப்ரோக்கலி - 3 பூக்கள்

செய்முறை:

ப்ரோக்கலியை வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பின்னர் நீரை வடித்து விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் கழுவிய அரிசி

பாசிப்பருப்பு

ப்ரோக்கலி மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியை திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை நன்கு மசிக்கவும்.

சுவையான ப்ரோக்கலி கிச்சடி தயார். இந்த கிச்சடியுடன் நெய் ஊற்றி 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு ஊட்டலாம். காய்கறிகள் சேர்க்காத பருப்பு சாதம் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டு செய்யும்.

குறிப்புகள்: