ப்ரைடு மொசரில்லா ஸ்டிக்ஸ்( Fried Mozarella Sticks)
தேவையான பொருட்கள்:
ப்ரெஸ் மொசரில்லா சீஸ் - 1 கட்டி
முட்டை - 2
ப்ரெட் தூள் - 1 கப்
மைதா மாவு - 1/2 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
பார்மஜான் சீஸ் - 1/4 கப் + 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் மொசரில்லா சீஸை 1 இன்ச் துண்டுகளாக நீளமாக வெட்டி கொள்ளவும்.
பின்பு ப்ரெட் தூளை பார்மஜான் சீஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஒரு தட்டில் வைக்கவும்.
முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
நீளமாக வெட்டி வைத்துள்ள மொசரில்லா சீஸை ஒன்றை எடுத்து மைதா மாவில் பிரட்டி பின் முட்டை கலவையின் போட்டு எடுக்கவும்.
அதன் பின் அதனை ப்ரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுக்கவும். இப்படியே அனைத்தையும் செய்து ஒரு தட்டில் அடுக்கி ப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்..
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் இந்த மொசரில்லா ஸ்டிக்ஸை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதனை சூடாக தான் பரிமாற வேண்டும். பரிமாறும் பொழுது பார்மஜான் சீஸை இதன் மேல் தூவி கொடுக்கவும். இதற்கு கூட இத்தாலியன் டொமேட்டோ சாஸ் நன்றாக இருக்கும்.
குறிப்புகள்:
துருவிய சீஸை இதற்கு உபயோகிக்க கூடாது. ப்ரெட் தூள் தடவிய மொசரில்லா ஸ்டிக்ஸை ப்ரிட்ஜில் வைத்த பின் பொரித்து எடுத்தால் எண்ணெயில் ப்ரெட் தூள் விழாமல் இருக்கும்