ப்ரைடு பனானா (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
வெல்லம் - 1/4 கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தினை தோலினை நீக்கி 2 இன்ச் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் பட்டரினை போட்டு வாழைப்பழம் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் பொடித்து வைத்துள்ள வெல்லத்தினை போட்டு கிளறவும்.
வெல்லம் கரைந்து வாசனை போகும் வரை வைத்து கடைசியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது சுவையான ப்ரைடு வாழைப்பழம் ரெடி.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.