ப்ரைடு சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Cubed Chicken Breast - 500 கிராம் சீரக தூள் - ஒரு மேசைக்கரண்டி தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி சக்தி சிக்கன் மசாலா - 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி தந்தூரி மசாலா தூள் - 4 மேசைக்கரண்டி லெமன் ஜூஸ் - 3 சொட்டு கெட்டியான தயிர் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் எல்லா மசாலாவையும் சேர்த்து பிசையவும். பிறகு அதை ப்ரிட்ஜில் 15 நிமடம் வைக்கவும்.

ப்ரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் ஒரு முறை பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரிக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.

வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான தந்தூரி ப்ரைட் சிக்கன் ப்ரஸ்ட் தயார்

குறிப்புகள்: