ப்ரேட்சில்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப் கலந்து அடிக்க: பால் - முக்கால் கப் சர்க்கரை - கால் கப் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - ஒரு தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய் - கால் மேசைக்கரண்டி ஈஸ்ட் செய்ய: ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி சர்க்கரை - ஒரு தேக்கரண்டி வார்ம் வாட்டர் - கால் கப் மேலே தூவ : வெள்ளை எள் - சிறிது பிரஷ் செய்ய : உருக்கிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
இளம் சூடான நீரில் ஈஸ்ட்டையும்
ஒரு தேக்கரண்டி சர்க்கரையையும் போட்டு கலந்து வைக்கவும். 5 நிமிடத்தில் ஈஸ்ட் நுரை கட்டி இருக்கும்.
கலந்து அடிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்துக் கொள்ளவும். பின் அதில் நுரை கட்டிய ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவினை சேர்த்து நன்கு பிசுபிசுவென கையில் ஒட்டும் பதத்தில் பிசையவும். அதை பிளாஸ்டிக் கவரில் நன்கு மூடி வார்மான இடத்தில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்தால் இரு மடங்காக ஆகி இருக்கும்.
சிறிது உலர்ந்த மைதா மாவை தளத்தில் பிசிறி இரு மடங்கான மாவினை நீளவாக்கில் உருட்டவும்.
பின் அதை நான்கு துண்டுகளாக சமமாக வெட்டவும்.
ஒரு துண்டை தனியே எடுத்து மீண்டும் நீளமாக ஒரே அளவில் சீராக சுமார் ஒன்றரை அடிக்கு உருட்டவும்.
அதை U வடிவத்தில் வைக்கவும்.
பின் U வின் இரு முனைகளையும் உள்நோக்கி செலுத்தி க்ராசாக வைத்து மேலே உருக்கிய வெண்ணெயை தடவவும்.
ட்ரேவில் வெண்ணெய் தடவி
மாவினால் டஸ்ட் செய்து ப்ரேட்சில்களை வைத்து எள்ளினை தூவி விடவும்.
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அல்லது அவரவர் அவனிற்கு ஏற்ப வைத்து பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.
சுவையான
மிருதுவான ப்ரேட்சில்ஸ் ரெடி.