ப்ரெஷ் வெஜிடபிள் ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

பீன்ஸ் - 250 கிராம்

கேரட் - 250 கிராம்

பச்சைமிளகாய் - 4

வினிகர் - அரைகப்

சன்ஃப்ளவர் ஆயில் - அரை கப்

கடுகு - 1 பெரியகரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸை விரல் நீள துண்டுகளாக நறுக்கி அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை பூக்களாக எடுத்து அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை முதல் நாள் இரவே கழுவி நறுக்கி ஒரு துணியில் மேலே போட்டு இரவு முழுவதும் உலரவிடவும்

காலையில் கடுகை பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு காய்ந்த ஜாடியில் காய்கறிகளை போட்டு எண்ணெய், வினிகர், கடுகு பொடி, உப்பு எல்லாம் போட்டு நன்கு குலுக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிடவும்.

குறிப்புகள்:

இதில் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்