ப்ரெட் மசாலாத் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மசாலாத்தோசை மா - 2 கப்

ப்ரெட் (சிறியது) - ஒரு துண்டு

பெரிய வெங்காயம் (மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கியது) - ஒன்று

தக்காளிப்பழம் (மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 2

மிளகாய்த்தூள் - (1 - 2) தேக்கரண்டி

மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையானள அளவு

எண்ணைய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

பால் - சிறிதளவு

புளிக்கரைசல் - சிறிதளவு

உள்ளி (பூண்டு,சிறியதுண்டுகளாகநறுக்கியது) - ஒன்று

கறிவேப்பிலை (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - சிறிதளவு

செய்முறை:

ஒரு பலகையில் ப்ரெட்டை வைத்து சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டி அதனை ஒருதட்டில் வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டிய ப்ரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

பொன்னிறமாக பொரித்த பின்பு ப்ரெட் துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

பின்பு அடுப்பில் உள்ள தாட்சியில்(வாணலியில்) சிறிதளவு எண்ணெய் விட்டுசூடாக்கி அதில்மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிய பெரியவெங்காயம், தக்காளிப்பழம், உள்ளி(பூண்டு)ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூளை சேர்த்து பிரட்டி பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.

இவை எல்லாவற்றையும் அவியவிடவும். பிறகு ஓரளவு அவிந்ததும் இதனுடன் மசாலாத்தூள் சிறிய துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலை, பால், புளிக் கரைசல் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும்.

இவை நன்றாக அவிந்து குழம்பாகியதும் இதனுடன் எண்ணெயில் பொரித்து வைத்திருக்கும் ப்ரெட்துண்டுகளை போட்டு பிரட்டி (2 - 5) நிமிடங்கள் அவியவிடவும்.

நன்கு அவிந்து பிரட்டல்(தடிப்பான)குழம்பாகியதும் அடுப்பில் இருந்து பிரட்டல் குழம்பு உள்ள தாட்சியை(வாணலியை)இறக்கி சிறிதளவு நேரம் மூடிவைக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும். தோசைக்கல் சூடானதும் சிறிதளவு நல்லெண்ணெயை ஒருதுணியில் எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.

பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக் கல்லில் ஊற்றி நன்றாகதடவி தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன் மேல் செய்து வைத்திருக்கும் ப்ரெட் மசாலா பிரட்டல் கறியை வைத்து அதன் இருபக்கமும் மடித்து அதை திருப்பிபோட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளை சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

ப்ரெட் மசாலாத் தோசை சுவையானதும் சத்தானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண கூடியதுமாகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும்.

எச்சரிக்கை - உளுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் -

தோசை குளிர்மையானது,(மசாலாத்தோசைமா செய்ய தேவையானது - 1/2 கப் புழுங்கலரிசி(2மணித்தியாலம் ஊறவைத்த),1/2கப் பச்சரிசி(2மணித்தியாலம் ஊறவைத்த),(1/4கப் உளுத்தம்பருப்பு,1/2தேக்கரண்டி வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றைகலந்து 15நிமிடங்கள் ஊறவைத்தது) ஊறவைத்த எல்லாவற்றையும் சேர்த்து அரைத்தது).