ப்ரெட் புட்டு
தேவையான பொருட்கள்:
பாண் துண்டுகள்(நடுப்பகுதி) - (8 - 10)
தேங்காய்ப்பூ - தேவையான அளவு
சர்க்கரைதூள் (தூள் வெல்லம்) - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - (1 - 2)
உப்பு - அரைக்கால் தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாண் துண்டுகளை நன்றாக உதிர்த்து வைக்கவும். உதிர்த்து வைத்த பாண்துண்டுகளுடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை(வெல்லம்)தூள், உப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
கலந்த பின்பு சுவையான ப்ரெட் புட்டு தயாராகி விடும். இதனை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
ப்ரெட் புட்டு சுவையானதும் மிக மிக இலகுவாக செய்ய கூடியதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி உண்ணக்கூடியதும் கார்போஹைட்ரேட், மினரல், கொழுப்பு போன்ற பல சத்துகள் அடங்கியது. ஆகவே இதனை செய்து பார்த்து இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர், ஆஸ்துமா நோயாளர் ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - சர்க்கரைதூளுக்கு(வெல்லத்திற்கு) பதிலாக சீனியை (சர்க்கரை)பாவிக்கலாம்.