ப்ரெடெட் க்ரிஸ்பி ஃபிஷ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - வாடையில்லாத மீன் - கால் கிலோ

எலுமிச்சைச்சாறு - அரை தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

மல்லி பொடி - ஒரு பின்ச்

பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் தேக்கரண்டி

முட்டை - ஒன்று

பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

எண்ணெய் பொரிக்க - ஒரு கப்

செய்முறை:

முதலில் முள்ளில்லாத வாடையில்லாத எளிதில் வேகும் வகை மீனை 3 இன்ச் நீளம், ஒரு இன்ச் அகல துண்டுகளாக வெட்டவும்.

துண்டுகளை கழுவி தண்ணீர் வடித்து உப்பு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி, மல்லி பொடி சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

பிறகு முட்டையை நன்கு அடித்து அதில் ஊறிய மீனை முக்கி ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி ஒரு தட்டில் அடுக்கவும்.

அதனை ஃப்ரிசரில் 20 நிமிடம் வைக்கவும். இதனால் ப்ரெட் க்ரம்ஸ் நன்கு அதனுடன் ஒட்டும்.

பின்பு எண்ணெயை காயவைத்து அதில் அந்த துண்டுகளை இட்டு இருபுறமும் பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

இதற்கு அதிகம் வாடையும் இல்லாமல், முள்ளும் இல்லாமல் சீக்கிரம் வேகும் வகை மீனாக வேண்டும்(grouperfish-hammour,prawns,nile perch,dover sole).எண்ணெயில் அதிக நேரம் மொறுக விட்டால் சுவை கெடும். மீனின் உள்ளில் நீர்த்தன்மை குறையாமல் சற்று தீயை அதிகப்படுத்தி பொரிக்கவும்.