ப்ருஸ்கெட்டா (Bruschetta)
0
தேவையான பொருட்கள்:
Baguette Bread- 4ஸ்லைஸ்
மயோனைஸ்- 2மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம்- 4
மல்லிகீரை- 2தேக்கரண்டி(பொடியாக வெட்டியது)
வெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
Baguette Bread ஸ்லைஸ்களின் இரு புறமும் வெண்ணெய் தடவி மைக்ரோவேவில் 40 விநாடிகள் முதல் 1நிமிடம் வரை வைக்கவும்.
மயோனைசுடன் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், மல்லிக்கீரை கலந்து டோஸ்ட் செய்த ப்ரெட் ஸ்லைஸின் மீது பரவலாக வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பிஸ்ஸா ஹட் இல் சாப்பிட்டு, வீட்டில் முயற்சி செய்தது. மயோனைசுடன் வேகவைத்து பொடியாக வெட்டிய சிக்கன், இறால் போன்றவற்றையும் சேர்க்கலாம். முட்டையை வாணலியில் ஊற்றி பொடியாக கிளறியும் மயோனைசுடன் கலக்கலாம்.