ப்ராக்கலி மஃபின்
தேவையான பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - அரை கப் பூண்டு - 2 பல் மிளகு தூள் - அரை தேக்கரண்டி ப்ராக்கலி - அரை கப் உருளை - ஒன்று முட்டை - ஒன்று தயிர் - 2 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி சீஸ் - கால் கப் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆல் பர்பஸ் மாவு
மிளகு தூள்
உப்பு
சீஸ் ஆகியவற்றை நன்றாக கலந்து வைக்கவும்.
முட்டை
தயிர்
எண்ணெயை ஒன்றாக கலந்து வைக்கவும்.
ப்ராக்கலி மற்றும் உருளையை வேக வைத்து பொடியாக நறுக்கி வைக்கவும். இப்பொழுது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். தேவையெனில் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இது பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அவனை 425 F டிகிரி முற்சூடு செய்யவும். மஃபின் ட்ரே இருந்தால் அதில் பேக்கிங் ஸ்ப்ரே அடித்து அதில் முக்கால் பாகம் ஊற்றவும்.
20-25 நிமிடம் பேக் செய்யவும். பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும். சீஸ் ப்ராக்கலியில் கால்ஷியம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சுவையான மாலை நேர ஸ்நாக் ரெடி.