ப்ராக்கலி பொரியல்
தேவையான பொருட்கள்:
ப்ராக்கலி பூக்கள் - 2 கப் காய்ந்த மிளகாய் - 3 வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 2 பல் பயத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு தேங்காய்பூ துருவல் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 3/4 தேக்கரண்டி சீரகம் - 3/4 தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்க உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை தண்ணீரில் கழுவி விட்டு
சிறிது தண்ணீர் சேர்த்து 15 - 20 நிமிடம் ஊற வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும். பூண்டை தோலுரித்து
பொடிதாக தட்டி/நசுக்கி வைக்கவும். ஊற வைத்த பயத்தம் பருப்பை மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். (அல்லது) அடுப்பில்
சிறிது தண்ணீரில் வேகவிட்டு கிள்ளு பதத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு
சூடானதும்
கடுகு போட்டு பொரிந்ததும்
உளுந்து போட்டு சற்றே சிவக்க விடவும். இதனுடன் காய்ந்த மிளகாயை சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம்
பூண்டு
கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் சிறிதளவு வதங்கியதும்
ப்ராக்கலி பூக்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு போட்டு
சிறிது நீர் தெளித்து
மூடிபோட்டு வேக விடவும்.
காய் ஒரு பாதியளவு வெந்ததும்
மூடியைத் திறந்து அதனுடன் வேகவிட்டு வைத்திருக்கும் பயத்தம்பருப்பை சேர்த்து ஒரு முறை கிளறி மேலும் ஒரு சில நிமிடங்கள் வேக விடவும். (பயத்தம் பருப்பை ஏற்கனவே வேக வைத்து சேர்ப்பதனால்
இப்போது ரொம்ப நேரம் வேக வைக்க வேண்டிய தேவை இருக்காது.)
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தது தெரிந்ததும்
கடைசியாக தேங்காய்ப்பூ துருவலை சேர்த்து
ஒரு முறை கிளறிவிட்டு இறக்கவும்.
காரம் குறைவான
சுவையான கிட்ஸ் ப்ராக்கலி பொரியல் தயார்!