ப்ராக்கலி பராத்தா
தேவையான பொருட்கள்:
ப்ராக்கலி (Broccoli) பூக்கள் - 1 1/2 கப் கோதுமை மாவு - 2 கப் ஃப்லாக்ஸ் சீட் (Flax seeds) பவுடர் - 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 4 இஞ்சி - ஒரு சிறிய துண்டு சீரக்கத்தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி தயிர் - 3 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ப்ராக்கலி பூக்களை தண்ணீரில் கழுவி எடுத்து
க்ரேட்டர்/ ஃபுட் ப்ராசஸ்சர் கொண்டு துருவி வைக்கவும். இஞ்சியை தோலை நீக்கிவிட்டு
பச்சை மிளகாயுடன் சேர்த்து க்ரேட் செய்து (அ) மிக்ஸியில் போட்டு தண்ணீரில்லாமல் ட்ரையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய காய்கறிக்கலவை எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு
அதனுடன் உப்பு
சீரகத்தூள்
கரம் மசாலா சேர்த்து
கலந்து விடவும். ஒரு சில நிமிடங்களில் ப்ராக்கலி பார்க்க லேசாக ஈரப்பதம் வந்து இருக்கும்.
இதில் கோதுமைமாவு
ஃப்லாக்ஸ் சீட் பவுடரைப் போட்டு
தயிர் விட்டு அழுத்தி பிசையவும். தேவைப்பட்டால்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி
ஒரு அரை மணி நேரம் வைக்கவும்.
பிறகு மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி
மிகவும் மெல்லியதாக இல்லாமல்
லேசாக தடிமனான பராத்தாக்களாக தேய்த்து எடுக்கவும்.
இதை சூடான தவாவில் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிபோட்டு
அடுத்தப்பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
இப்போது சூடான சுவையான ப்ராக்கலி பராத்தா தயார். இதற்கு தொட்டுக்கொள்ள என்று வேறு எதுவுமே தேவைப்படாது. அப்படியே தனியாகவே சாப்பிட நன்றாகவே இருக்கும். ஒரு கப் தயிருடன் பரிமாறி சாப்பிட மிக அருமையாக இருக்கும்.