ப்ரசுல் ஸ்ப்ரௌட்ஸ் மசாலா
0
தேவையான பொருட்கள்:
ப்ரசுல் ஸ்ப்ரௌட்ஸ் - 200 g
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கரம் மசாலா - 1/4 tsp
எண்ணெய் - 1 tsp
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ப்ரசுல் ஸ்ப்ரௌட்ஸ், வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியது தக்காளி சேர்த்து குழையும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு ப்ரசுல் ஸ்ப்ரௌட்ஸ் சேர்த்து வதக்கி எல்லா பொடி மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து கிளறி விட்டு 5 நிமிடம் விட்டு இறக்கவும்.
சுவையான ப்ரசுல் ஸ்ப்ரௌட்ஸ் மசாலா ரெடி
குறிப்புகள்:
முட்டைகோசிலும் இப்படி செய்யலாம். கடைசியாக ஒரு முட்டையை உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து அடித்து பொரித்தெடுத்து கூட சேர்க்கலாம்.