போஞ்சி சாலட்
தேவையான பொருட்கள்:
போஞ்சிக்காய்(Beans) - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - (2 - 5)
மிளகு (தூள்) - தேவையானளவு
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய் சாறு (லெமன்சாறு)- ஒரு தேக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சீனி (இந்தியா சர்க்கரை) - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
போஞ்சியை கழுவி அவிக்கவும். அவித்த போஞ்சியின் இருமுனையை வெட்டி சுத்தமாக்கவும்.
மேலிருந்து கீழாக குறுக்காக வெட்டவும் பின்பு துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை மேலிருந்து கீழாக (இரண்டாக) வெட்டவும்.
வெங்காயத்தை மெல்லியதாகவும் சிறியதாகவும் வெட்டவும். ஒரு பாத்திரத்தில் வெட்டியதை(போஞ்சிக்காய், பச்சை மிளகாய் .வெங்காயம்) சேர்த்து கலக்கவும்.
கலக்கியவற்றுடன் உப்பு, மிளகுத்தூள், வினிகர், சீனி சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் அவற்றை 5 நிமிடம் ஊறவிடவும்.
ஊறியதும் இலகுவானதும் வித்தியாச சுவையானதுமான போஞ்சி சாலட் தயார்.
குறிப்புகள்:
போஞ்சிக்காய்(Beans) புரோட்டின் சத்துடையது இது பொதுவாக அசைவம் சாப்பிடாதவர்கள் மிக அதிகமாக உண்ண தேவையான உணவு. சரியான அளவும், தயாரிக்கும் விதமும்.