பொன்னாங்கண்ணிக் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னாங்கண்ணி - 250 கிராம் பாசிப்பயறு - 4 மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் - 15-20 கிராம் பூண்டு - 2 பற்கள் பால் - 50 - 75 மி.லி பச்சை மிளகாய் - 2 எலுமிச்சம்புளி - 2 தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

பொன்னங்கண்ணி கறி செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பொன்னாங்கண்ணியை தண்டோடு(முத்தலைத் தவிர்த்து) சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்

வெங்காயம்

பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயறை 10 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பயறு

நறுக்கின வெங்காயம்

பூண்டு

பச்சை மிளகாய்

உப்பு போட்டு 300 மி.லி தண்ணீர் ஊற்றி தீயின் அளவை குறைத்து

மூடி நன்கு வேக விடவும்.

இவையனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் பொன்னாங்கண்ணி கீரையை சேர்க்கவும்.

அதனுடன் 100 மி.லி சுடுநீரை ஊற்றி பிரட்டி விட்டு மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.

தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் பாலை ஊற்றி கிளறி விட்டு கொதிக்க விடவும்.

கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மேலே எலுமிச்சை புளி விட்டு பிரட்டி விடவும்.

சுவையான ஆரோக்கியம் நிறைந்த பொன்னங்கண்ணிக் கறி ரெடி. இது மிகவும் குளிர்ச்சியான கறி. முக்கியமாக அம்மை நோய் வந்தவர்களுக்கு மிளகாய் சேர்க்காமல் இதை செய்து கொடுப்பார்கள். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: