பொடேட்டோ வெஜிடபிள் பாஸ்கட் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
அல்லது - ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
எண்ணெய் - 200 கிராம்
வெஜிடபிள் - கேரட் -2,வெள்ளரி -2
கண் தட்டு - 1 (மீடியம் சைஸ்)
சாதா தட்டு - 1 (சிறியது)
உப்பு - தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி குச்சி மாதிரி கட் செய்து கொள்ளவும்.
கேரட், வெள்ளரியை விரும்பிய வடிவில் கட் செய்து கொள்ளவும்.
உருளையை எண்ணெய் காய்ந்த பிறகு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருளைக்கிழங்கில் உப்பு தூவி கொள்ளவும்.
கண் தட்டில் சுற்றி பொரித்த உருளைக்கிழங்கை அடுக்கி வைக்கவும். நடுவில் சிறிய தட்டில் வெஜிடபிள் வைத்து அலங்கரிக்கவும்.
குழந்தைகளைக் கவரும் பொடேட்டோ வெஜிடபிள் பாஸ்கட் ரெடி.
குறிப்புகள்:
கம்பி பாஸ்கட் இருந்தால் அல்லது கிளாஸ்பாஸ்கட்டில் கூட அடுக்கி அழகுப்படுத்தி பரிமாறலாம். உருளைக்கிழங்கு ரெடி பண்ணாமல், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உபயோகித்தும் செய்யலாம்.