பொடேட்டோ போரிட்ஜ் (8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
சீஸ் - அரை க்யூப்
செய்முறை:
வேக வைத்த உருளைக்கிழங்கையும், சீஸையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து குழந்தைக்கு ஊட்டவும்.
குறிப்புகள்:
ஒரு சில அரபு நாடுகளில் இதை குழந்தைகளுக்கு மூன்று நேரமும் ஊட்டி குழந்தைகள் கும்மென்று இருக்கும். அவர்கள் 4,5 மாதத்திலிருந்தே ஊட்டுவார்கள். கொஞ்சம் ஹெவி உணவென்பதால் நாம் கவனமாக கொஞ்சம் கொடுத்து பிரச்சனை இல்லையென்றால் தினம் கொடுக்கலாம். என் குழந்தைக்கும் இதை 7 மாதத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன். இதை விரும்பி உண்ணுவார்கள். ஜீரணக் குறைவு, கேஸ் அல்லது மற்ற பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு கவனமாக ஊட்டவும்.