பைனாப்பிள் பேஸ்ட்ரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேஸ்ட்ரி ஷீட் - ஒன்று பைனாப்பிள் துண்டுகள் - 2 கப் சர்க்கரை - தேவைக்கு ஏலக்காய் / பட்டை பொடி - சிறிது வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி தேன் [விரும்பினால்]

செய்முறை:

பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சர்க்கரை சேர்த்து சிறுந்தீயில் வைக்கவும். சர்க்கரை உருகி கலர் மாறும் போது பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக சாஃப்ட்டாக வரும் வரை வைக்கவும். கடைசியாக ஏலக்காய் அல்லது பட்டை பொடி சேர்த்து எடுக்கவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை இரண்டாக மடித்து நடு பகுதியை விட்டு ஓரங்களை (ஷீட்டை 3 ஆக மடித்தால் நடு பகுதியை விட்டு மீதம் உள்ள இரண்டு மட்டும்) கத்தியால் படத்தில் உள்ளது போல் வெட்டவும்.

இப்போது விரித்தால் இப்படி இருக்கும்.

நடுவே பைனாப்பிள் ஸ்டஃபிங் வைத்து நடு பகுதியை படத்தில் உள்ளது போல் வெட்டவும்.

வெட்டிய பகுதியை பைனாப்பிள் மேல் மூடவும். வெளியே வராமல் இருக்க இது அவசியம்.

பின் மேலே உள்ள இரண்டு முனையையும் விட்டு

அடுத்த இடது பக்க முனையை பைனாப்பிள் மேல் மூடவும். அதன் மேல் வலது பக்க முனையை மூடவும்.

இதே போல் ஆல்டர்னேடிவாக மூடிக்கொண்டே வந்தால் இப்படி வந்து முடியும். மீதம் உள்ள கடைசி துண்டுகளை நீக்கி விடவும்.

அவனை 200 C'ல் முற்சூடு செய்யவும். தயார் செய்ததை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து தயாராக இருக்கும் அவனில் பேக் செய்யவும். 10 - 15 நிமிடம் போதுமானது. வெளியே எடுத்து தேன் தடவி வைக்கவும். சுவையான பைனாப்பிள் பேஸ்ட்ரி தயார்.

குறிப்புகள்: