பேஸ்ட்ரி ஷீட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப் + தேய்க்க தேவையான அளவு வெண்ணெய் (unsalted) - 250 கிராம் எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி உப்பு

செய்முறை:

மைதாவில் உப்பு கலந்து எலுமிச்சை சாறும்

கால் பங்கு உருக்கிய வெண்ணெயும் சேர்த்து பிசையவும்.

பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து மாவை சாஃப்ட்டாக பிசையவும். (2 கப் மாவுக்கு 1 கப் நீர் தேவைப்படும்).

5 - 10 நிமிடம் வரை மாவை நன்றாக பிசையவும். மாவை விரலால் அழுத்தினால் மீண்டும் தானே மேலே எழும்பி வர வேண்டும். இதுவே பதம்.

மீதம் உள்ள வெண்ணெயை (உருகாத வெண்ணெய். படத்தில் உருகி இருக்கிறது

அதனால் நான் கூடுதல் நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தேன்) மத்தால் இடித்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு மைதா கலந்து சதுரமாக செய்யவும். மாவை நடுவில் திக்காக விட்டு 4 பக்கம் மட்டும் தேய்த்து கொண்டு அதன் நடுவே வெண்ணெயை வைக்கவும்.

இப்போது 4 பக்க மாவையும் மூடவும்.

இப்போது வெண்ணெய் லேசாக உருக துவங்கி இருக்கும். அதனால் ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.

இதை எடுத்து தேய்க்கவும். வெண்ணெய் வெளியே வராமல் இருக்க வேண்டும்.

தேய்த்த மாவை மீண்டும் மூன்றாக மடிக்கவும். ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.

ஸ்டெப் 7

8 இரண்டையும் 5 முறை செய்யவும். அதாவது மீண்டும் மீண்டும் எடுத்து தேய்த்து

மடித்து ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.

கடைசியாக ஒரு முறை தேய்த்து கொண்டு விரும்பிய வடிவில் வெட்டலாம். பட்டர் ஷீட்களை நடுவில் கொடுத்து அடுக்கி இவற்றை ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் ஸ்டோர் செய்யலாம். எந்த பேஸ்ட்ரி செய்வதானாலும் மாவை ஸ்டஃபிங்குடன் தயார் செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து உடனடியாக அவனில் போட்டால் நன்றாக வரும்.

குறிப்புகள்: