பேரீச்சம்பழ கேக்
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 800 கிராம்
கோதுமை மா - 500 கிராம்
பட்டர் - 500 கிராம்
சீனி - 450 கிராம்
முட்டை - 8 முட்டை
பிளம்ஸ் - 300 கிராம்
வெனிலா - விருப்பத்திற்கு ஏற்ப
தேயிலை - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதல் நாள் இரவு பேரீச்சம்பழத்தின் விதை நீக்கி சிறுசிறு துண்டங்களாக வெட்ட வேண்டும். அத்துடன் பிளம்ஸ் சிறு சிறு துண்டங்களாக வெட்ட வேண்டும்.
பின்பு இவையிரண்டையும் பெரிய பாத்திரத்தில் போட்டு தேநீரில் ஊற வைக்கவேண்டும் (பேரீச்சம்பழம், பிளம்ஸ் இவையிரண்டும் தேநீரில் மூழ்கி இருக்க வேண்டும்).
அடுத்து பட்டர், சீனி, முட்டை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக அடிக்க வேண்டும்.
பிறகு கோதுமைமா, பேக்கிங் பவுடர் கலந்து அரித்து அடித்த கலவையுடன் கலக்கவும். பின்பு வெனிலா போட்டு கலக்கவும் .
பேரீச்சம்பழத்தை போட்டு ஒரளவாக கலக்கவும். அதன் பின்பு அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை வாசி உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 20 அல்லது 25 நிமிடங்கள் (உங்கள் ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது) பேக் செய்யவும்.
குறிப்புகள்:
பேரீச்சம்பழ கேக்கில் இரும்பு சத்து நிறைந்தது. கவனிக்க வேண்டிய விஷயங்கள்-தேயிலை நல்ல நிறமாக இருக்க வேண்டும். அப்போது தான் கேக் நல்ல கோக்கோ நிறமாகவும் அழகாகவும் இருக்கும்.