பேரீச்சம்பழ இனிப்பு
0
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 1 lb
கன்டன்ஸ்ட் மில்க் - 1/2 ரின்
மாறி பிஸ்கட் - 1 பக்கற்
பொடித்த கஜு - 1/2 கப்
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பேரீச்சம்பழத்தை குறுணலாக வெட்டிக் கொள்ளவும்.
மாறி பிஸ்கட்டை தூளாக்கவும்.
கன்டன்ஸ்ட் மில்க், வெட்டிய பேரீச்சம்பழம், தூளாக்கிய மாறி பிஸ்கட், பொடித்த கஜு, வனிலா எஸன்ஸ் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இறுக்கமாக குழைக்கவும்.
பின்னர் ஒரு அலுமினியம் ஃபாயில் அல்லது பாச்மன்ட் பேப்பரில் நீளவாக்கில் வைத்து உருட்டிக் கொள்ளவும்.
பின்னர் இதை ஃபிரிட்ஜில் (~ 3- 4 மணித்தியாலங்கள்) அல்லது ஃபிரீஸரில் (~2 மணித்தியாலங்கள்) உறைய விடவும்.
பின்னர் இதனை வெளியே எடுத்து துண்டுகளாக வெட்டி கஸ்டர்ட் புடிங் அல்லது ஐஸ்கிறீமுடன் பரிமாறவும்.