பேங்கன் கபர்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்- 4

எண்ணெய்- 2 மேசை கரண்டி

வெங்காயம்-2

இஞ்சி- சிறு துண்டு

பச்சைமிளகாய்- 2

மல்லிதூள்- 1 ஸ்பூன்

கரம் மசாலாதூள்- 1/4 ஸ்பூன்

தக்காளி-2

அரைத்த தக்காளி விழுது- 1/4 கப்

மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

உப்பு- தேவைக்கு

செய்முறை:

தீயில் கத்தரிக்காயை காட்டி பின் தோலுரித்து மசித்துக்கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய்,பொடியாய் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

பின்னர் எல்லா தூள்களையும் சேர்த்து வதக்கவும்

பின் மசித்த கத்தரிக்காய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்:

சப்பாத்தி,நாண்,பூரி, பட்டூரா க்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்