பேக்டு முழு மீன் கிரில் (இந்தியன் டைப்)
தேவையான பொருட்கள்:
மீடியமான முழு மீன் - இரண்டு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்றரை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சைச்சாறு - மூன்று மேசைக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - இரண்டு
வெங்காயம் - ஒன்று
செய்முறை:
மீனை சுத்தம் செய்து இடையிடையே நன்கு ஆழமாக கீறி விடவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் மீனில் நன்கு பிரட்டி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும்.
முதலில் உருளைக்கிழங்கை வட்ட வடிவமாக கட்செய்து ட்ரேயின் அடியில் வைத்து அதன் மேல் மீனை வைத்து மேலே வெங்காயத்தை வட்டவடிவமாக கட் செய்து வைக்கவும்.
இது பேக் செய்யும் போது தண்ணீர் கீழே நிற்கும். அதற்கு முதலில் மேல் தீயில் 15 நிமிடம் வைக்கவும்.
அடுத்து மேலும் கீழும் உள்ள தீயை செலக்ட் செய்து 10 நிமிடம் வைக்கவும்.
கடைசியாக அடியில் ட்ரேயில் வைத்து பத்து நிமிடம் வைக்கவும்.
சுவையான பேக்டு முழு மீன் கிரில் ரெடி.
குறிப்புகள்:
இது டயட் செய்பவர்களுக்கு ஏற்ற டிஷ்.
இதனை குபூஸ், சப்பாத்தியுடன் ப்ளையின் சாதத்துடன் சாப்பிடவும். இது அரேபியர்களின் உணவாகும் அடிக்கடி தினப்படி உணவே இது தான் இது போல் மட்டன், சிக்கன் எல்லாம் பேக்செய்து குபூஸ்ஸுடன் சாப்பிடுவார்கள். அவர்கள் மசாலாக்கள் அதிகம் சேர்க்காமல், இது சீஸ் சேர்த்து செய்வார்கள். மூன்றாவது முறை பேக் செய்யும் போதும் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது வடித்து விட்டும் வைக்கலாம்.