பேக்டு ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்
தேவையான பொருட்கள்:
ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் - 15 - 20
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 1 (அ) 2 தேக்கரண்டி
செய்முறை:
ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸை கழுவி தண்ணீரை வடிய விடவும்.
பிறகு ஒவ்வொன்றையும் நேர்வாகில் இரண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இதனுடன் உப்பு, மிளகுத்தூள், ஆலிவ் எண்ணெயை கலந்து பிரட்டி வைக்கவும்.
அவனை 400 டிகிரி ஃபாரன்ஹிட் அளவிற்கு முற்சூடு செய்யவும்.
ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் துண்டுகளை, அலுமினியம் ஃபாயில் விரித்த பேக்கிங் ட்ரேயில் போட்டு அவனில் வைத்து, 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
இடையில் ஒரு 12 நிமிடங்களில் அவனைத்திறந்து ட்ரேயை எடுத்து கொஞ்சம் கலந்துவிட்டு வைக்கவும்.
சுலபமான, சுவையான பேக்டு ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் தயார்.
குறிப்புகள்:
இதனை அப்படியே வெறும் சாலட் போல சாப்பிடலாம். பேக்கான
ப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் கொஞ்சம் க்ரச்சினஸ் கலந்து சாஃப்டா, இனிப்பு சுவைபட நன்றாக இருக்கும்.