பேக்டு ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை - ஆறு
நறுக்கிய காளான் - அரைக் கோப்பை
வெங்காயத்தாள் - கால் கோப்பை
ஸூக்கினி - அரைக்கோப்பை
நறுக்கிய புரோக்கலி - அரைக்கோப்பை
நறுக்கிய குடைமிளகாய் - கால் கோப்பை
உப்புத்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
துருவிய சேடார் சீஸ் - அரைக்கோப்பை
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி அதில் வெங்காயம் மற்றும் எல்லாக் காய்கறிகளையும் ஒவ்வொன்றாகப் போட்டு உப்புத்தூளையும் மிளகையும் போட்டு வதக்கவும்.
காய்கள் நன்கு வதங்கியவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.
முட்டைகளை இயந்திரத்தின் உதவியால் நன்கு நுரைக்க அடித்து சீஸையும் சேர்த்து காய்கறி கலவையில் ஊற்றி இலேசாக கலக்கவும்.
பிறகு அதை பேக் செய்யும் வட்டமான பாத்திரத்தில் (2 Lகொள்ளவுக் கொண்டது) ஊற்றி சூடாக்கிய அவனில் 375 டிகிரி Fல் வைத்து அதில் முட்டை நன்கு வேகும்வரை பேக்செய்து வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு சூடாக பரிமாறவும்.