பேஃக்டு பொட்டேட்டோ (Baked potato)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடைசியில் சேர்க்க - 1 உருளைக்கிழங்கு தேவையான அளவு
பட்டர் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அவனை 350 F யில் முற்சூடு செய்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை நன்றாக கழுவி கொள்ளவும்.
பின்னர் உருளைக்கிழங்கினை fork வைத்து 6 - 7 இடத்தில் குத்தி கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கின் மீது எண்ணெய் தடவவும்.(எண்ணெய் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். )
அதன் பின் பேக்கிங் ட்ரெயில் வைத்து இதனை முற்சூடு செய்துள்ள அவனில் 30 - 40 நிமிடம் வேகவிடவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பிறகு அதனை நடுவில் கத்தி வைத்து கீறி இரண்டாக பிரியும்.
பின்னர் அதனுள் பட்டர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிடவும் .
இப்பொழுது சுவையான பேஃக்டு பொடேட்டோ ரெடி.
குறிப்புகள்:
பேக் செய்யும் பொழுது தோலினை நீக்க வேண்டாம். சிலர் இத்துடன் சோர் க்ரீம் சேர்த்து சாப்பிடுவார்கள்.