பெஸ்டோ பாஸ்தா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. பாஸ்தா - 100 கிராம்

2. Parmesan சீஸ் - 1/4 கப்

3. பாதாம் - 7

4. கொத்தமல்லி இலை - 1 கை பிடி

5. புதினா இலை - கொத்தமல்லி அளவில் பாதி [விரும்பினால்]

6. மிளகாய் வற்றல் - 3

7. வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

8. சீஸ் துருவல் - 1 மேஜைக்கரண்டி

9. உப்பு

10. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்தாவை தேவையான அளவு நீர் விட்டு உப்பு சேர்த்து பாக்கெட்டில் சொல்லி இருக்கும் முறைப்படி வேக விடவும். வெந்ததும் சுடு நீரை வடிக்கட்டி விட்டு குளிர்ந்த நீர் ஊற்றி வடித்து வைக்கவும்.

பாதாமை நீர் விட்டு ஊற விடவும்.

Parmesan சீஸ், கொத்தமல்லி இலை, புதினா இலை, விதை நீக்கிய மிளகாய் வற்றல், பாதாம், தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து சிம்மில் கிளறவும்.

சிறிது நேரம் நன்றாக வதங்கியதும் பாஸ்தா சேர்த்து பக்குவமாக கலந்து விட்டு எலுமிச்சை சாறு கலந்து எடுக்கவும்.

பரிமாறும்போது மேலே சூடான பாஸ்தா மேல் சீஸ் துருவல் தூவி கொடுக்கவும்.

குறிப்புகள்:

விரும்பினால் புதினா சேர்க்கலாம். இல்லை என்றால் கொத்தமல்லி இலை மட்டும் போதும். பாதாமுக்கு பதிலாக வால்நட்டும் பயன்படுத்தலாம். காரத்துக்கு மிளகாய் வற்றலை குறைத்து கொஞ்சம் மிளகும் பயன்படுத்தலாம். மேலே தூவ ஸ்வீட் கார்ன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை பயன்படுத்தலாம். பெஸ்டோ பாஸ்தா ஐடியா கிடைத்ததே லாவண்யா குறிப்பில் இருந்து தான். நன்றி லாவண்யா. அந்த கீரை எல்லாம் இங்கே கிடைக்காததால் வேறு விதாமாக செய்ய முயற்சித்தேன். நன்றாக வந்தது.