பெல் பெப்பர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெல் பெப்பர் - ஒன்று நறுக்கின வெங்காயம் - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு தேக்கரண்டி கறித்தூள் - ஒரு தேக்கரண்டி பெரிய சீரகம் - சிறிது கடுகு - சிறிது வெந்தயம் - சிறிது ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி புளிக்கரைசல் - 1/4 கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

பெல்பெப்பரை சிறியத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின பெல்பெப்பர்

வெங்காய

பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

பின்னர் அதனுடன் பெரிய சீரகம்

கடுகு

வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து ஒன்றாக நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல்

கால் கப் தண்ணீர்

கறித்தூள்

உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்.

குழம்பு சற்று கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கி வைக்கவும்.

சுவையான பெல்பெப்பர் குழம்பு தயார். இதை சோறு

பண்

புட்டு

இடியப்பம் எல்லாவற்றிக்கூடவும் பக்க உணவாக சாப்பிடலாம்.

குறிப்புகள்: