பூசணிக்காய் இனிப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணி(ஸ்குவாஷ்-squash) - ~300 கிராம்

கடலை மா - 1 கப்

சீனி - 1 கப்

வெனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி

பட்டர்/நெய் - 2 மேசைக்கரண்டி

கஜு(முந்திரி) - 15

ரெய்சின் - 15

செய்முறை:

பூசணியை சிறிய துண்டுகளாக வெட்டி முள்ளு கரண்டியால் குத்தி வைக்கவும்.

சீனியை பாகு காய்ச்சவும்.

அதனுள் வெட்டிய பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு கொதிக்க விடவும்.

பூசணித்துண்டுகள் நன்கு அவிந்ததும் அதனுள் கடலைமாவினை சேர்த்து கிளறவும்.

சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும் அதனுள் பட்டர்/நெய் சேர்த்து கிளறவும்.

கலவை நன்கு சுருண்டு வந்ததும் ஒரு பட்டர் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி பரப்பவும்.

சிறிது பட்டர்/நெய்யில் கஜு(முந்திரி), ரெய்சினை வறுக்கவும்.

இதனை தட்டில் பரப்பி வைத்துள்ள இனிப்பின் மேல் வைத்து அலங்கரித்து ஆறியதும் துண்டுகளாக்கவும்.

அல்லது சிறிது சூடாக இருக்கும் போதே சிறிய உருண்டைகளாக பிடித்து அதன் மேல் கஜு, ரெய்சின் வைத்து அலங்கரிக்கவும்.

சுவையான பூசணிக்காய் இனிப்பு தயார். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

குறிப்புகள்: