புர்ஜில் அரப் ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
அவக்கோடா - ஒரு கப்
மேங்கோ - ஒரு கப்
ஸ்ட்ராபெர்ரி - கால் கப்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஐஸ் கியூப்ஸ் - ஆறு
செய்முறை:
மூன்று பழங்களையும் தனித்தனியாக சர்க்கரை, ஐஸ் கியூப் சேர்த்து தயிர் பதத்தில் மிக்ஸியில் (அ) ப்ளன்டரில் அரைத்து எடுக்கவும்.
இப்போது பெரிய ஜூஸ் டம்ளரில் முதலில் பாதி டம்ளர் அளவுக்கு மேங்கோ, பிறகு ஸ்ட்ராபெர்ரி, பிறகு அவக்கோடா, கடைசியில் ஒரு தேக்கரண்டி அளவு ஸ்ட்ராபெர்ரி ஊற்றி குடிக்கவும்.
குறிப்புகள்:
துபாயில் எல்லா ரெஸ்டாரண்ட்களிலும் இந்த ஜூஸ் ரொம்ப பிரபலம்