புரோக்லி ஸலட்
0
தேவையான பொருட்கள்:
புரோக்லி - 1
ஒலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய் ஃபிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
மிளகுதூள்
உப்பு
சீஸ் (எதாவது)- 1/4 கப்
செய்முறை:
புரோக்லியை சிறிய துண்டுகளாக வெட்டவும். காம்பு பகுதியையும் மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் ஃபிளேக்ஸை போட்டு வதக்கவும்.
பின்னர் புரோக்லியை போட்டு வதக்கவும்.
தேவையான அளவு உப்பு, மிளகுதூளைப் போட்டு பிரட்டி மூடி 4 - 6 நிமிடங்களுக்கு அவிய விடவும்.
சுவையான ஸலட் தயார். இதனை பரிமாறும் தட்டில் போட்டு சீஸ் தூவி பரிமாறாவும்.