புரோக்கோலி கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புரோக்கோலி - கால் கிலோ

முழு பூண்டு - ஒன்று

வெங்காயம் - கால் பாகம் (சிறிய துண்டு)

எண்ணெய் - 2 அல்லது 3 தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

தண்ணீர் - கால் கப்

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

புரோக்கோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்று தடிமனாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோக்கோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.

புரோக்கோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும். வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

வேக வைப்பதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. புரோக்கோலியின் பச்சை நிறம் மாறாமல் வேகவைக்கவேண்டும். அப்போதுதான் சுவையாகவும் சத்துக்கள் குறையாமலும் இருக்கும்.