புரோக்கலி ரேப் பொரியல்(Brocoli Rabe)
0
தேவையான பொருட்கள்:
புரோக்கலி ரேப் - 1 கட்டு
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் புரோக்கலி ரேப்பை மிகவும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டினை நசுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பின் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
இப்பொழுது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் புரோக்கலி ரேப்பை உப்புடன் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஒரு தட்டு போட்டு முடி 6 - 10 நிமிடம் வேகவிடவும்.
இப்பொழுது சுவையான, சத்தான புரோக்கலி ரேப் பொரியல் ரெடி.
குறிப்புகள்:
புரோக்கலி ரேப் என்பது புரோக்கலிக்கீரை.