புரோக்கலி பொரியல்
தேவையான பொருட்கள்:
புரோக்கலி - ஒரு பூ வெங்காயம் - பாதி பூண்டு - 3 பல் மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
புரோக்கலியை கழுவி சிறு பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். தண்டு பகுதியையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு
கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பின் தட்டி வைத்துள்ள பூண்டு
நறுக்கிய வெங்காயம்
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள புரோக்கலி சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள்
தனியா தூள்
சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
புரோக்கலி வெந்ததும்
உப்பு சரிப்பார்த்து
மிளகு தூள் தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான புரோக்கலி பொரியல் தயார். இது சாம்பார் சாதம்
ரசம் சாதம்
தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.