புட்டிங்
தேவையான பொருட்கள்:
பால் - அரை லிட்டர்
முட்டை - 5
கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி
சீனி - 300 மில்லி
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
கஸ்டர்ட் பவுடரில் சிறிது பால் கலந்து கட்டியில்லாமல் கலக்கிகொண்டு, மீதி பாலையும் அத்துடன் சேர்க்கவும்.
முட்டையை நன்கு கலக்கி அதனுடன் சேர்த்து, சீனி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கரைக்கவும்.
தட்டையான ஒரு பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி சீனியை போட்டு, ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டியால் ப்ரௌன் கலரில் முறுகும்வரை கலக்கி உடனே அடுப்பை அணைத்துவிட்டு, அந்த முறுகிய பாகு எல்லா இடத்திலும் பரவும்படி செய்யவும்.
பிறகு அதை நன்கு ஆறவைத்தால் அப்படியே உறைந்துவிடும்.
இப்போது கலக்கி வைத்துள்ள கலவையை அதன் மேல் ஊற்றி, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வட்டிலப்பம் போல் வேகவைத்து எடுத்து துண்டுகள் போடவும்.