புடலங்காய் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - ஒன்று
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்(நறுக்கிய) - அரைப்பாதி
உள்ளி - 2 பல்
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு - சிறிதளவு
மெட்ராஸ் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி
பசுப்பால்(ஆவின்பால்) - 3 கப்
தண்ணீர் - 3 கப்
அஜினோமோட்டோ - அரைகால் தேக்கரண்டி(விரும்பினால்)
செய்முறை:
அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து அதை சூடாக்கவும். பின்பு அதில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.
நல்லெண்ணெய் சூடானதும் நறுக்கிய புடலங்காயை அதில் போட்டு சுருள வதக்கிக் கொள்ளவும்.
புடலங்காய் ஒரளவு சுருள வதங்கியதும் அதனுடன் வெங்காயம், கடுகு, சீரகம்(சோம்பு), உள்ளி ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
ஒரளவு சுருள வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, மெட்ராஸ்கறித்தூள், அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
இவையாவும் சுருள வதங்கியதும் அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு வெந்ததும் அதனுடன் பசுப்பாலை (ஆவின்பாலை) சேர்க்கவும். பால் கொதித்து இவற்றுடன் சேர்ந்த பின்பு உப்பை போட்டு கலக்கி வேகவிடவும்.
இவையாவும் வெந்ததும் தேசிக்காய்(எலுமிச்சம்) சாற்றை பிழிந்து விடவும்.
பின்பு புடலங்காய் குழம்பு தயாராகிவிடும் அதை அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின்பு இதை சோற்றுடன் (சாதத்துடன்) பரிமாறவும்.
குறிப்புகள்:
புடலங்காய் குழம்பு மினரல் சத்து நிறைந்தது. இது ஆசியா கண்டத்தினை சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களால் பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும் உணவு இதுவாகும். இதனைப்போல பீன்ஸிலும் (அவரைக்காயிலும்)செய்யலாம்.
எச்சரிக்கை - புடலங்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அஜினோமோட்டோ(விரும்பினால்)சேர்க்கவும், புடலங்காயை சுருள வதக்கிக்கொள்ளவும், இவை சுருள வதங்கியதும் அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்,பிறகு வெந்ததும் அதனுடன் பாலை சேர்க்கவும். மாற்று முறை - பசுப்பால்(ஆவின் பால்)பதிலாக தேங்காய் பாலும் பாவிக்கலாம், நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மரக்கறி எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றை பாவிக்கலாம்.