புடலங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பிஞ்சு புடலங்காய் - ஒன்று நல்லெண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - சிறிதளவு கடுகு - ஒரு தேக்கரண்டி சீரகம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை
கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு வெங்காயம் - பாதி பூண்டு - 6 பல் தக்காளி -2 மெட்ராஸ் கறித்தூள் - 2 தேக்கரண்டி தேங்காய் பால் + பசுப்பால் (ஆவின்பால்) - ஒரு கப் தண்ணீர் - அரை கப்
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு
சீரகம்
சோம்பு
பூண்டு
வெங்காயம்
கறிவேப்பிலை
புடலங்காய் போட்டு சுருள வதக்கவும். பின்பு மஞ்சள் தூள்
மெட்ராஸ் கறித்தூள்
உப்பு ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
அனைத்தும் சுருள வதங்கியதும் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். புடலங்காய் குழம்பு தயார்.