புடலங்காய் ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - 2

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடியளவு

பெருங்காயம் - அரை தேக்கரண்டி

மிளகு - கால் தேக்கரண்டி

செத்தல் மிளகாய் (வத்தல்) - 2

செய்முறை:

அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து அதை சூடாக்கவும். அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய புடலங்காயை அதில் போட்டு வதக்கிக் கொள்ளவும் .

புடலங்காய் வதங்கியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

திரும்பவும் அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதை சூடாக்கி அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

அதில் துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும்.

ஆறிய பின்பு பொன்னிறமாக வறுத்த துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய் கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் .

அதனுடன் வதங்கிய புடலங்காயை சேர்த்து நைசாக அரைக்கவும். இதோ சுவையான புடலங்காய் ஊறுகாய் தயாராகி விட்டது. அதன் பின்பு இதை பரிமாறவும்.

குறிப்புகள்:

புடலங்காய் ஊறுகாய் மினரல் சத்து நிறைந்தது இது ஆசியா கண்டத்தினை சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களால் பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும் உணவு இதுவாகும். எச்சரிக்கை - புடலங்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.