பீன்ஸ் தக்காளி கூட்டு
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 500 கிராம் தக்காளி - 2 ஒலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று பூண்டு - 3 பல் தண்ணீர் - அரை கப் உப்பு மிளகுத் தூள் கொத்தமல்லித் தழை
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பீன்ஸை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்
பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் பீன்ஸை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
பீன்ஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் உப்பு
மிளகுத் தூள் சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான பீன்ஸ் தக்காளி கூட்டு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.